Sunday 4 January 2015

Hastha vajrasanam

ஹஸ்த வஜ்ராசனம்

முதலில் வஜ்ராசனத்தில் அமரவேண்டும். இடதுகையை முழங்கைவரை மடித்து மடிமேல் வைத்துக் கையை வயிற்றோடு பொருத்திக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு முன்னால் குனிந்து நெற்றியைத் தரையை நோக்கிக் கொண்டுவரவும். வலது கையைப் பக்கத்தில் ஊன்றிக் கொள்ளலாம்.

அல்லது எப்படி வேண்டுமானாலும் வசதிப்படி வைத்துக்கொள்ளலாம்.   இந்த நிலையில் பத்துநொடி இருந்த பின்னர் நிமிர்ந்து மூச்சை இழுத்துக்கொளலாம். இளைப்பாறிய பின்னர் வலது கையை மடக்கி மடிமேல் வைத்து வயிற்றோடு பொருத்திக்கொண்டு, மூச்சை வெளியேற்றிவிட்டு, முன்னால் குனிந்து முன்போலவே பத்து நொடிகள் இருந்தபின் நிமிர்ந்துகொள்ளவும்.

இவ்வாறு இடதுகை ஒருமுறை வலதுகை ஒருமுறை என்று செய்தால் அது ஒருசுற்று ஹஸ்தவஜ்ராசனம் செய்ததாகும். ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும்.  நன்கு பயிற்சிக்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் செய்தால் போதும்.

பயன்கள்....

இவ்வாசனத்தைச் செய்யும்பொழுது சிலர் மூச்சை உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. மூச்சு நுரையீரலிலும் வயிற்றிலும் நிறைந்திருந்தால் முன்னால் குனிவது சிரமமாக இருக்கும்.

பெண்களுக்கு இவ்வாசனத்தொகுப்பு அற்புதமான பயன்களைத் தரகூடியது.. வயிற்றுத் தொந்தியைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. ஓவரி, கருப்பை சமபந்தமான உபாதைகள் அகலுகின்றன.

No comments:

Post a Comment