Wednesday 28 August 2013

கொசு ஒரு பிரச்சனையா

கொசு ஒரு பிரச்சனையா..? இது 100% வேலை செய்யும்...

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்...

ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகி, வீட்டில் வைக்கவும்....

மஞ்சள் மகிமை

மஞ்சள் மகிமை

நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும் ?மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம் ?மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம்.

மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது. வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள்தான்.

சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை, வேப்பங் கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால், வயிற்றில் பூச்சிகள் இருக்காது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும்.

மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் தூளை சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ், வடை, அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும்.

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால், அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போது, மிளகின் கெட்டத் தன்மையை மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய்கூட அண்டாது.

இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான்.

விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.

மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும்போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம் பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.

மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும்.

அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும்.

மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்.

KEYBOARD SHORTCUTS

MORE THAN 100 KEYBOARD SHORTCUTS YOU MUST KNOW AND SHARE..........

The General Shortcuts

* CTRL+C (Copy)
* CTRL+X (Cut)
* CTRL+V (Paste)
* CTRL+Z (Undo)
* DELETE (Delete)
* SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
* CTRL while dragging an item (Copy the selected item)
* CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
* F2 key (Rename the selected item)
* CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
* CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
* CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
* CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
* CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
* SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
* CTRL+A (Select all)
* F3 key (Search for a file or a folder)
* ALT+ENTER (View the properties for the selected item)
* ALT+F4 (Close the active item, or quit the active program)
* ALT+ENTER (Display the properties of the selected object)
* ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
* CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously)
* ALT+TAB (Switch between the open items)
* ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
* F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
* F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
* SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
* ALT+SPACEBAR (Display the System menu for the active window)
* CTRL+ESC (Display the Start menu)
* ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu)
* Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
* F10 key (Activate the menu bar in the active program)
* RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
* LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
* F5 key (Update the active window)
* BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer)
* ESC (Cancel the current task)
* SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

Dialog Box Keyboard Shortcuts

* CTRL+TAB (Move forward through the tabs)
* CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
* TAB (Move forward through the options)
* SHIFT+TAB (Move backward through the options)
* ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
* ENTER (Perform the command for the active option or button)
* SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
* Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
* F1 key (Display Help)
* F4 key (Display the items in the active list)
* BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts

* Windows Logo (Display or hide the Start menu)
* Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
* Windows Logo+D (Display the desktop)
* Windows Logo+M (Minimize all of the windows)
* Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)
* Windows Logo+E (Open My Computer)
* Windows Logo+F (Search for a file or a folder)
* CTRL+Windows Logo+F (Search for computers)
* Windows Logo+F1 (Display Windows Help)
* Windows Logo+ L (Lock the keyboard)
* Windows Logo+R (Open the Run dialog box)
* Windows Logo+U (Open Utility Manager)

Accessibility Keyboard Shortcuts

* Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
* Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
* Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
* SHIFT five times (Switch the StickyKeys either on or off)
* NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
* Windows Logo +U (Open Utility Manager)

Windows Explorer Keyboard Shortcuts

* END (Display the bottom of the active window)
* HOME (Display the top of the active window)
* NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
* NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
* NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
* LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
* RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)

Shortcut Keys for Character Map

* After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
* RIGHT ARROW (Move to the right or to the beginning of the next line)
* LEFT ARROW (Move to the left or to the end of the previous line)
* UP ARROW (Move up one row)
* DOWN ARROW (Move down one row)
* PAGE UP (Move up one screen at a time)
* PAGE DOWN (Move down one screen at a time)
* HOME (Move to the beginning of the line)
* END (Move to the end of the line)
* CTRL+HOME (Move to the first character)
* CTRL+END (Move to the last character)
* SPACEBAR (Switch between Enlarged and Nor mal mode when a character is selected)

Microsoft Management Console (MMC) Main Window Keyboard Shortcuts

* CTRL+O (Open a saved console)
* CTRL+N (Open a new console)
* CTRL+S (Save the open console)
* CTRL+M (Add or remove a console item)
* CTRL+W (Open a new window)
* F5 key (Update the content of all console windows)
* ALT+SPACEBAR (Display the MMC window menu)
* ALT+F4 (Close the console)
* ALT+A (Display the Action menu)
* ALT+V (Display the View menu)
* ALT+F (Display the File menu)
* ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts

* CTRL+P (Print the current page or active pane)
* ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
* SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
* F1 key (Open the Help topic, if any, for the selected item)
* F5 key (Update the content of all console windows)
* CTRL+F10 (Maximize the active console window)
* CTRL+F5 (Restore the active console window)
* ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item)
* F2 key (Rename the selected item)
* CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote Desktop Connection Navigation

* CTRL+ALT+END (Open the m*cro$oft Windows NT Security dialog box)
* ALT+PAGE UP (Switch between programs from left to right)
* ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
* ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
* ALT+HOME (Display the Start menu)
* CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
* ALT+DELETE (Display the Windows menu)
* CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
* CTRL+ALT+Plus sign (+) (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.)

Internet Explorer navigation

* CTRL+B (Open the Organize Favorites dialog box)
* CTRL+E (Open the Search bar)
* CTRL+F (Start the Find utility)
* CTRL+H (Open the History bar)
* CTRL+I (Open the Favorites bar)
* CTRL+L (Open the Open dialog box)
* CTRL+N (Start another instance of the browser with the same Web address)
* CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L)
* CTRL+P (Open the Print dialog box)
* CTRL+R (Update the current Web page)
* CTRL+W (Close the current window)

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...

தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:

வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.

அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.

பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.

உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.

மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.

முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.

கணுக்கால் வலி வருமுன் காக்க:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.

கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.

மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.

வசம்பு 5 கிராம்
மஞ்சள் 5 கிராம்
சுக்கு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்

எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

எருக்கின் பழுத்த இலை 5
வசம்பு 5 கிராம்

இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.

எளிய பாட்டி வைத்தியம்

எளிய பாட்டி வைத்தியம்:-

1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
1

பயன் தரும் பச்சிலை திருநீற்றுப் பச்சை

பயன் தரும் பச்சிலை திருநீற்றுப் பச்சை

சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்த பச்சிலையின் சாறு எடுத்து சுடு நீரில் கலந்து கொடுக்கலாம், கஷாயம் செய்தும் கொடுக்கலாம். முகம் போன்ற உடல் உறுப்புகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள்.

இந்த விஷப் பருக்களைத் தெரியாமலோ நகத்தாள் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தையே கூட ஏற்படுத்தி விடும். இத்தகைய விஷப்பருக்கள் தோன்றினால் யாரும் கவலைபடத் தேவையில்லை. திருநீற்றுப்பச்சை இலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேளை தடவினால் போதும் பரு காய்ந்து கொட்டிவிடும்.

திறுநீற்றுப் பச்சையின் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி வியர்வைகளை அகற்றும் வேலைகளையும் செய்கிறது. இதன் இலை உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து சிறுநீரைப்பெருக்கும் தன்மையை கொண்டது. சித்த வைத்தியத்தில் லேகியம், தைலம் தயாரிப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். காது வலி, காதில் சிழ் வடிதல் போன்ற நோய்களுக்கு இதன் இலையை பறித்து சாறு பிழந்து காதுகளில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி, சீழ் வடிதல் குணமாகும்.

தேள் கடித்துவிட்டது என்றால் திருநீற்றுபச்சையின் சாற்றை கடிவாயில் பேட்டால் வலி குணமாகும். ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும்.

இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்



இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.

பொதுவாக இது எளிதான காரியம் அல்ல. இது மிகவும் கடினமானது. ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயானது முற்றிவிடும்.

சரி, இப்போது அந்த இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.

சரியான எடை

உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பான நடை

போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும்.

பூசணிக்காய்

பூசணிக்காய் இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. மேலும் பூசணிக்காயில் உள்ள ஒருசில நொதிகள் இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும்

ஸ்டார்ச் உணவுகளை தவிர்க்கவும்

ஏற்கனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாதத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த தினை, கம்பு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பு நிறைந்த ஈரல்

தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கொழுப்பு நிறைந்த கல்லீரல் பிரச்சனை. இந்த பிரச்சனையில் கொழுப்புக்களானது கல்லீரலில் அதிகம் தங்கி, கிளைகோஜன் பயன்படுத்தப்படாமல் அதிகப்படியாக சேகரிக்கப்பட்டிருக்கும். இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே கல்லீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் குறையும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது.

குறைந்த கிளைசீமிக் உள்ள உணவுகள்

உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவு மட்டும் குறைவாக இருந்தால் போதாது. அதில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும்.

பட்டை

பட்டையை உணவில் அதிகம் சேர்த்தால், இன்சுலின் குறைபாட்டை போக்கி, நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு தினமும் காலையில் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது பட்டையை பொடி செய்து போட்டு குடிப்பது மிகவும் நல்லது.

குரோமியம் குறைபாடு

உடலில் குரோமியம் என்னும் கனிமச்சத்து குறைவாக இருந்தாலும், இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே குரோமியம் அதிகம் உள்ள உணவான கடல் சிப்பியை அதிகம் உட்கொள்வது சிறந்தது.

வைட்டமின் கே உணவுகள்

எளிதில் கரையக்கூடிய கொழுப்பு தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே உள்ள உணவுப் பொருட்களையோ அல்லது மருந்துகளையோ சாப்பிட்டால், இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கலாம். அதிலும், பச்சை இலை காய்கறிகளான பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.
வெண்டைக்காய்

இரவில் படுக்கும் போது வெண்டைக்காயை நீரில் நறுக்கி போட்டு, காலையில் எழுந்து அந்த நீரைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதோடு, இன்சுலின் குறைபாடும் நீங்கும்.
உடற்கடிகாரம்
இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர்.நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின்செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.