Friday 21 November 2014
Tuesday 18 November 2014
Wednesday 12 November 2014
Check out "Sutsumam Thirantha Thirumandiram" by on Scribd!
I'm reading "Sutsumam Thirantha Thirumandiram" by on Scribd and thought of you!
Read more: http://scribd.com/doc/63001234
Build your personal digital library on Scribd! Subscribe today and your first month is free. http://www.scribd.com/subscribe
Kanagarajan V
Check out "பழந்தமிழரின் அளவை முறைகள்.." by iyappangokul on Scribd!
I'm reading "பழந்தமிழரின் அளவை முறைகள்.." by iyappangokul on Scribd and thought of you!
Read more: http://scribd.com/doc/242763755
Build your personal digital library on Scribd! Subscribe today and your first month is free. http://www.scribd.com/subscribe
Kanagarajan V
Check out "108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்" by on Scribd!
I'm reading "108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்" by on Scribd and thought of you!
Read more: http://scribd.com/doc/239917651
Build your personal digital library on Scribd! Subscribe today and your first month is free. http://www.scribd.com/subscribe
Kanagarajan V
Sunday 9 November 2014
Sunday 21 September 2014
Sunday 4 May 2014
புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்
புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
புளிச்சக் கீரையில் வைட்டமின் “ஏ”யும் தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.
இக்கீரை உடம்புக்கு குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தருவதுடன் பித்தத்தையும் தணிக்கிறது. குடற்புண், மூத்திர நீரை வெளியேற்றுதல், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மலத்தை இளக்குகிறது. இக்கீரையின் புளிப்புத் தன்மையால் சிணுக்கு இருமல், மந்தம் நீங்கி, காய சித்தியும், வீரிய சக்தியும் உண்டாக்குகிறது. மேலும் வாத நோய் ருசியின்மை, சீதளம், இரத்தப் பித்த ரோகம், கரப்பான் வீக்கம் முதலிய நோய்களையும் நீக்கும். இந்தப் பூக்களைப் பிழிந்த சாற்றுடன் மிளகும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, அரோசிகம், பித்த வாந்தி முதலிய நோய்களை நீக்கலாம். இவ்விதையின் எண்ணெயை வீக்கங்களுக்கும் ஊமைக் காயங்களுக்கும் தடவ வலி நீங்கும்.
இந்தக் கீரையைத் துவையலாகவும், சட்டினியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பொரியல், மசியல், குழம்பு போன்ற வேறு முறைகளிலும் இதைச் சமைக்கலாம்
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
வீட்டு மருத்துவ குறிப்புகள்
• நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.
• வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.
• மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.
• வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.
• நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
• தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.
• வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
• மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
• பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
• திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
• குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.
• சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.
மூட்டு வலிக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள்
எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும். இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே. மூட்டு வலி எனப்படும்
முக்கிய காரணங்கள்: பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு.
அறிகுறிகள்: காலையில் எழுந்திருக்கும்போது வலி அதிகரித்தும், நேரம் செல்லச் செல்லக் குறைந்தும் காணப்படும். நடக்கும்போது அதிகரித்தும், ஓய்வின் போது வலி குறைவாகவும் இருக்கும். மூட்டுகளை அசைக்கும் போதுஒருவிதமான ஒலியை (Criptations)உணரலாம்; இணைப்புகளைச்(Joints)சுற்றியுள்ள தசைகளும் தசை நாண்களும் வலுவிழந்து விறைப்புடன் காணப்படும்; அதிகப்படியான எலும்பு வளர்ச்சிகளும், சிறு குருத்துகளும் (spur) வளரும். மூட்டுகள் வீங்கிக் கடினமாக இருக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:-
* அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.
* சிற்றாமுட்டி சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.
* குங்கிலியத்தைப் பொடித்து ஒரு கிராம் பாலில் கலந்து பருகலாம்.
* தழுதாழை இலைப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
* நிலாவாரைத் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து உண்ணலாம்.
* மருதம்பட்டை மற்றும் மாவிலங்குப் பட்டை சம அளவு பொடித்து, அதில் கால் ஸ்பூன் வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
* வாகைப் பூ, வேப்பம் பூ சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
* பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கற்றான் இலைப் பொடி இவற்றை சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் பாலில் சேர்த்து உண்ணலாம்.
* சங்கன் இலை, வேர்ப் பொடி சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் பாலில் உண்ணலாம்.
* ஈயக்கொழுந்துப் கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
வெளிப்பிரயோகம்:
* சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.
* சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
* குப்பைமேனி இலையுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
* புளி இலையை அரைத்து, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துப் 'பத்து’ப் போடலாம்.
* சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
* வசம்பை, காய்ச்சுக்கட்டி உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
* வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
* நொச்சி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
* நீர்ப்பிரம்பி இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டலாம்.
* கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
* ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.
சேர்க்க வேண்டியவை:
கோதுமை, பச்சைப்பயறு, குதிரைவாலி, தினை, சிவப்புச் சம்பா, பார்லி, இஞ்சி, நாட்டு வாழைப்பழம், பால், கீரை.
தவிர்க்க வேண்டியவை:
கேழ்வரகு, கிழங்குவகை, காபி, டீ, எண்ணெய், வாழைக்காய், புளி
உடலுக்கு உகந்த பாகற்காய்
பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.
அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.
மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது
இளம் பெண்கள் ,தாய்மார்கள் மார்பக புற்று நோயால் தினசரி அவதிப் படுகிறீர்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது ..
அத்தகைய பெண்களுக்கான ஒரு சிறப்பு பதிவு
மாதுளம்பழம் மற்றும் மாதுளம்பழம் ஜூஸ் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது.
இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது” என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது.
மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம்.
எனினும், இது ஆய்வக முடிவுதான்.
நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது” என ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார்.
பல்வலியை போக்கும் இயற்கை மருந்து பொருட்கள்
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு.
இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன.
பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
1.பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.
2.கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி.
கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
3.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
4.வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
5.அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும்.
6.ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும்.
இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது.
7.ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.
8.ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.
9.உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம்.
இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
10.எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
11.எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம்.
இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
12.ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.
13.கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும்.
கொசுறு செய்தி
மண்ணெண்ணெய்யை { Kerosin } வாயில் ஊற்றி 3 முறை கொப்பளித்தால் உடனடியாக பல் வலி குணமாகும்.
பல் இடுக்கில் உள்ள கிருமிகள் அழியும்
சித்தர்கள் உடம்பை எப்படி விளித்தனர்
காயமே இது பொய்யடா என்று ஒரு சித்தர் பாட, போகர் சித்தர் காயமே இது மெய்யடா என்கிறார்! சித்தர்களுக்குளேயே இப்படி வித்தியாசமான விளக்கம் இருக்கிறது. மனித அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் இந்த உடம்புதான் மேடை. காய சாதனையை அகப்பேய் சித்தர் தேக ஞானம் என்கிறார்.
தேகத்தை (காயத்தை) நீண்டநாள் வாழும் படி (கல்பம்) செய்வது சித்த மார்கத்தில் முதல் படி. ஆதற்கு பல வழிகள் உண்டு. மருந்து, மூலிகைகள், ரசவாதம் போன்ற வெளி பொருட்களாலும், யோகம், தவம், வாசி போன்ற உள் பயிர்ச்சியினாலும் தேகத்தை காய கல்பமாக மாற்றலாம். இப்படி காய கல்பமாக மாறிய உடம்பை வைத்து தான் “நிர்விகல்பம்” என்கிற சமாதிநிலையை தபஸ்விகள் அடைந்து பரம்பொருளில் தங்களை இணைத்து கொள்கின்றனர்!
சில சித்தர்கள் உடம்பை எப்படி விளித்தனர் என்று பார்ப்போம்!
பாம்பாட்டி சித்தர் – உடம்பு ஓர் நீர்க்குமிழி.
திருமூலர் – நெருப்பில் இட்ட கற்பூரம். உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டுள்ளான்.
சிவவாக்கியர் – ஐந்து உணர்வுகளால் கட்டப்பட்ட தோணி. முட்டை ஓடு போன்றது. குடத்தில் நீரை மொள்ளும்போது குடம் நீரால் நிரம்பியிருப்பதுபோல சடலமாகிய இவ்வுடம்பு சிவத்தை மொண்டு அமைந்து இருக்கிறது!
கொங்கணர் – ஊத்தை சடலமென்று எண்ணாதே, இதை உப்பிட்ட பாண்டமென எண்ணாதே! ஊமை எழுத்தே உடலாச்சு!
வால்மீகர் – உடம்பு சக்தி – உயிர் சிவம்
கபீர் – நீ இருக்கும் இடமே உனது நுழைவாசல்
பத்திரகிரியார் – நவசூத்திர வீட்டை நான் என்று அலையாமல் சிவ சூத்திரத்தை தெரிந்தரிவது எக்காலம்?
இப்படி பலவிதங்களில் விவரிக்கப்பட்ட உடம்பை நாம் சரியாக பாது காக்கிறோமா? இல்லை ! கண்டதை சாப்பிட்டு, தொண்டை வரை தொடரும் ருசிக்காக, வயிறுக்கும், உடலுக்கும் பொருந்துமா என்று போலும் யோசிக்காமல் அனைத்தையும் விழுங்குகிறோம்! உண்ணும் அன்னத்தில் சாத்வீகம் எது, அல்லாதது எது என்று பிரித்தறிய வேண்டும். காய் கறிகள், பருப்பு வகைகள், இவைகளை தேர்ந்தெடுக்கும் போது கூட நம் உடலுக்கு எது நல்லது என்று பெரியவர்கள் சொல்லி போனதை சற்று நினைவில் கொள்ள வேண்டும். தெரிந்த ஒரு சில வகைகளை உணர்த்துகிறேன்!
பகல் வேளையில் மட்டும் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளில் இஞ்சி, தயிர், கீரை, நெல்லிக்காய் வகைகள் முக்கியமானது!
பருப்பு வகைகள் எல்ல காலத்திற்கும் ஏதுவானது! ஆன்மீக பாதையில் செல்பவர்களுக்கு பாசி பருப்பும், சிறு பயறும் மிகுந்த உதவி செய்யும். இவை இரண்டும் உப்பில்லாமல் உட்கொள்ள உடன் பலனளிக்கும்.
கத்திரிக்காய் எதிர் அலைகளை கொண்டது. தவிர்ப்பது நல்லது.
நாம் உட்கொள்ளும் உணவு இரண்டு மணி நேரம் தான் நம் வயிற்றில் தங்கலாம்! ஆதற்கு மீறி தாங்கும் உணவு உடலுக்குள் விஷமாக மாறும். இந்த விஷம் உடலால் உறிஞ்சப்பட்டு பல வித வியாதிகளை உருவாக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறி – முட்டைகோசு. இது ஜீரணமாக நான்கு மணிநேரம் ஆகும். ஆதலால், தவிர்ப்பது நல்லது.
அதிக கொழுப்பு உணவுகள் நீண்ட நேர சோம்பேறித்தனத்தை வளர்க்கும். ஆதலால் அப்படிப்பட்ட உணவுகளை உண்டால் சிறிது தூரம் நடக்கவேண்டும்.
பசியை கடந்து இருக்க பழகவேண்டும்!
உண்ணும் உணவில் நீர் தன்மை அதிகம் இருக்கவேண்டும்
வாரத்தில் ஒருமுறையேனும் உப்பில்லாமல் விரதம் இருக்க பழகுங்கள்! அனைத்தும் கைவசமாகும்!