Friday 20 September 2013

கைமருந்துகள்

கை மருந்துகள் - நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.
Photo: கை மருந்துகள் - நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.

தேவையான பொருட்கள்:

சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி - தலா 10கிராம்.
சீனா கற்கண்டு -700கிராம்.
பசும்பால்- 700மி.லி.
நெய்-175கிராம் .
தேன்-175 கிராம்.

செய்முறை:

1. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய்,
ஜாதிபத்ரி ஆகியவற்றை இளம் சூட்டில் வறுத்து சூரணம் செய்து கொள்ளவும்.

2. சீனா கற்கண்டை பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.

3. சூரணங்களை பாகில் தூவிக் கிண்டி பின் நெய் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைக்கவும்.

4. சுத்தமான தேன் விட்டுக் கிளறி ஜாடியில் பத்திரப் படுத்தவும்.

தினசரி ஒரு வேளைக்கு நெல்லிக்காய் அளவு என காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு
மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

விபாசனா தியானம்

விபாசனா தியானம்.
Sample Chapter - ஆழ்மனதின் அற்புத சக்திகள்.
Photo: விபாசனா தியானம்.
Sample Chapter - ஆழ்மனதின் அற்புத சக்திகள்.

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.

எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ... ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது). 

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார். 

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.

1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன். 

தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.

6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.

இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நூலின் ஆசிரியர் : என்.கணேசன்
ஆசிரியரின் இணையதளம் : http://enganeshan.blogspot.in/
நூல் வாங்க தொடர்பு கொள்ள : 9600123146 

Shared by,
www.facebook.com/groups/nganeshanfans/

Friday 13 September 2013

போதி தருமன்

போதி தருமன் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA )
STORY : -
போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் - மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான்.
புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய - மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் - தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான்.
கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான்.
சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.

Photo: போதி தருமன் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA ) 
STORY : - 
போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் - மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான். 
புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய - மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் - தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான். 
கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான். 
சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. 
அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.

Wednesday 11 September 2013

மாதுளம் பழம்

மாதுளம் பழம் ( Pomegranate) ..! 

மாதுளையில் ( Pomegranate) இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் வாந்தி, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தாகம், அதிதாகம், பித்தம், பித்தசுரம், மலட்டுத்தன்மை, உமிழ் நீர் அதிகச் சுரப்பு, விக்கல், மந்தம், செரியாமந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, பேதி, நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம், தீராத மயக்கம் ஆகிய அனைத்தும் நீங்கும் என்கிறது பதார்த்த குணபாடம் என்னும் பழந் தமிழர் நூல்.

Photo: மாதுளம் பழம் ( Pomegranate) ..! 

ஆரூர் கண்ட மாமனிதர்