Wednesday 11 September 2013

மாதுளம் பழம்

மாதுளம் பழம் ( Pomegranate) ..! 

மாதுளையில் ( Pomegranate) இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் வாந்தி, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தாகம், அதிதாகம், பித்தம், பித்தசுரம், மலட்டுத்தன்மை, உமிழ் நீர் அதிகச் சுரப்பு, விக்கல், மந்தம், செரியாமந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, பேதி, நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம், தீராத மயக்கம் ஆகிய அனைத்தும் நீங்கும் என்கிறது பதார்த்த குணபாடம் என்னும் பழந் தமிழர் நூல்.

Photo: மாதுளம் பழம் ( Pomegranate) ..! 

ஆரூர் கண்ட மாமனிதர்