Sunday 4 January 2015

Sarbasanam

சர்பாசனம்

செய்முறை:
௧.குப்புறப் படுத்துக் கால்களை நீட்டி நுனிக் கால்களின் மேல்புறம் தரையில் பதித்து இரு கால்களையும் இணைத்து வைக்கவும்.

௨.முகவாய்க்கட்டை தரையிலிருக்க,கைகளைக் கோர்த்து தொடைக்கு மேல் வைக்கவும்.

௩.நெஞ்சைத் தரையிலிருந்து எவ்வளவு உயர்த்த முடியுமோ அந்த அளவு  உயர்த்திக் கைகளையும் மேலே உயர்த்தவும்.பார்வை நேராக இருக்கட்டும்.

௪.ஆரம்ப நிலையில் மூச்சை சுவாசித்து இறுதி நிலையில் கும்பகம் செய்து ஆரம்ப நிலைக்கு திரும்பும்போது  மூச்சை வெளிவிடவும்.



பலன்கள்:

௧.இது ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஏற்ற ஆசனமாகும்.

௨.சுவாசத்தை சீராக்குகிறது.

௩.மார்புப் பகுதி வலுவடைகிறது.

௪.இதயத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.

Ushtrasanam

உஷ்ட்ராசனம்

ஒட்டகம் போன்று உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

செய்முறை:

முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். முழங்காலின் மேல் நின்று உடம்பை நேராக வைக்கவும். உடலை பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளை உள்ளங்கால்களின் மேல் வைக்கவும். அதே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்

பலன்கள்:

முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி, சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

Hastha vajrasanam

ஹஸ்த வஜ்ராசனம்

முதலில் வஜ்ராசனத்தில் அமரவேண்டும். இடதுகையை முழங்கைவரை மடித்து மடிமேல் வைத்துக் கையை வயிற்றோடு பொருத்திக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு முன்னால் குனிந்து நெற்றியைத் தரையை நோக்கிக் கொண்டுவரவும். வலது கையைப் பக்கத்தில் ஊன்றிக் கொள்ளலாம்.

அல்லது எப்படி வேண்டுமானாலும் வசதிப்படி வைத்துக்கொள்ளலாம்.   இந்த நிலையில் பத்துநொடி இருந்த பின்னர் நிமிர்ந்து மூச்சை இழுத்துக்கொளலாம். இளைப்பாறிய பின்னர் வலது கையை மடக்கி மடிமேல் வைத்து வயிற்றோடு பொருத்திக்கொண்டு, மூச்சை வெளியேற்றிவிட்டு, முன்னால் குனிந்து முன்போலவே பத்து நொடிகள் இருந்தபின் நிமிர்ந்துகொள்ளவும்.

இவ்வாறு இடதுகை ஒருமுறை வலதுகை ஒருமுறை என்று செய்தால் அது ஒருசுற்று ஹஸ்தவஜ்ராசனம் செய்ததாகும். ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும்.  நன்கு பயிற்சிக்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் செய்தால் போதும்.

பயன்கள்....

இவ்வாசனத்தைச் செய்யும்பொழுது சிலர் மூச்சை உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. மூச்சு நுரையீரலிலும் வயிற்றிலும் நிறைந்திருந்தால் முன்னால் குனிவது சிரமமாக இருக்கும்.

பெண்களுக்கு இவ்வாசனத்தொகுப்பு அற்புதமான பயன்களைத் தரகூடியது.. வயிற்றுத் தொந்தியைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. ஓவரி, கருப்பை சமபந்தமான உபாதைகள் அகலுகின்றன.

Vajrasanam

வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து, பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும். இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம். அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும். நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது.

செய்முறை விளக்கம் :
முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும்.

மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து - முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும். கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும்.

தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக்கி - கத்தரிக்கோல் போன்ற நிலையில் தோளுக்குக் கீழ் - வைத்துக்கொள்ளவும்.

வலது கை இடது தோளுக்குக் கீழும், இடது கை வலது தோளுக்குக் கீழும், மடங்கிய கைகளுக்கு இடையில் தலை இருக்குமாறும் நிலைகொள்ள வேண்டும்.

பழைய நிலைக்குத் திரும்ப முதலில் கைகள் இரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து, உடலின் பக்கவாட்டிற்கு கொண்டு வந்தப் பிறகு, ஆரம்பத்தில் செய்த்தைப் போல முழங்கைகளால் ஊன்றிக் கொண்டு வஜ்ராசன நிலைக்கு வரவும்.

எச்சரிக்கை :

உங்களுடைய முழங்கால்கள் காயமுற்று இருந்தாலோ அல்லது வலித்தாலோ இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

பயன்கள்:

இந்த ஆசனத்தில் மலச்சிக்கல் எத்தனை வருட பிரச்சனைகளாக இருந்தாலும் குட்பை சொல்லி சென்று விடும். தொந்தி. தொப்பை. பெருவயிறு போய்விடும். பேதி மாத்திரை சாப்பிட்டு மலம் போகவில்லை என்றால் கூட இந்த வஜ்ராசனத்தை செய்து பாருங்கள் பிறகு நீகளே மற்றவர்களுக்கு இதன் தன்மை பற்றி சொல்வீர்கள்.

இஸ்லாமியர்கள் இரவு 12 மணிக்கு பிரியாணி சாப்பிட்டால் கூட காலை ஜீரணமாகி விடுகிறது. இஸ்லாமியர்கள் அவர்களை அறியாமலேயே ஐந்து வேளை தொழுகை செய்யும் போது இயற்கையாகவே ஜீரண உறுப்புகள் வலிமை அடைந்து விடுகின்றன. எவ்வளவு ஹெவியாக கடினமான சாப்பாட்டை சாப்பிட்டாலும் ஜீரணிக்கப்பட்டுவிடுகிறது.

சிலர் சைவ சாப்பாடு வெறும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விட்டு வயிறு சரியில்லை(?!). வயிறு மந்தம். வயிறு உப்புசமாக இருக்கிறது என்பார்கள். ஏன்னா இவர்கள் இந்த யோகாசன நிலையை செய்வதில்லை.

Yogamudra

பத்மாசனத்தில் அமர்ந்து, இருகைகளையும் இணைத்து பின்புறம் கொண்டு சென்று ஒன்றோடொன்று பொருத்தி, மூச்சை மெல்ல சுவாசித்தவாறு முன்புறம் குனிந்து நெற்றியால் தரையை தொடவும். சில விநாடிகள் அதே நிலையில் இருந்து நிமிரவும். இப்படி 3 அல்லது 5 முறை செய்யலாம்.

பலன்கள்:

                பெண்கள் மகப்பேறுக்குக் பின் வயிறு பெரிதாவதையும், உடல் தடிப்பையும் தடை செய்யும். முதுகின் தசை, எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும், மலச்சிக்கல் நீங்கும், தாது இழப்பு, பலக்குறைவு நீங்கும். நுரையீரலில் உள்ள நோய்க்கிருமிகள் நாசமடையும். பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் – கேள்வி-பதிலும

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் – கேள்வி-பதிலும்

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்."

ஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.

யோகாசனம்= யோகம் +ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன.

1. யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யக்கூடாது?

யோகாசனம் அதிகாலை சூ¡¢யன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூ¡¢யன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மாலை 5.30 மணிக்குமேல் 7 மணிக்குள்ளும் செய்தால் நல்லது. யோகாசனம் செய்யும்போது கண்டிப்பாக வியர்வை வரக்கூடாது.

2. ஷிப்டு முறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்போது யோகாசனம் செய்ய வேண்டும்?

ஷிப்டு முறையில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்து விட்டு வீடு வந்த பின் வீட்டில் தூங்கி எழுந்த பின் மற்ற கடன்களை முடித்து, குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம்.

3. சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் சென்றபின் யோகாசனம் செய்யலாம்?

சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனப் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்களை முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.

4. மலம் வெளியேறாமல் இருந்தால் யோகாசனம் செய்யலாமா?

காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிடில் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும். அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.

5. யோகாசனம் வெறும் தரையில் செய்யலாமா?

வெறும் தரையில் யோகாசனம் செய்யக்கூடாது. அழுத்தாத வி¡¢ப்பின் மேல் யோகாசனம் செய்யவேண்டும். சமூக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை வி¡¢த்து யோகாசனம் செய்யலாம்.

6. வெந்நீ¡¢ல் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாமா?

யோகாசனம் செய்பவர்கள் எந்தக் கடும் குளிராக இருந்தாலும் பச்சைத் தண்ணீ¡¢ல் குளித்த பின்தான் யோகாசனம் செய்யவேண்டும். வெந்நீ¡¢ல் குளிப்பதால் வெகு விரைவில் நரம்புத் தளர்ச்சி மற்றும் சோம்பேறித்தனம் வந்துவிடும். மிகவும் பலவீனமானவர்கள் மிகக் குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்கள் இலேசான சூட்டில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம். ஆனால் இப்பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ளாமல் காலக்கிரமத்தில் பச்சைத் தண்ணீரையே குளிப்பதற்கு உபயோகிக்க வேண்டும். ஆஸ்துமா, நீ¡¢ழிவு நோய் உள்ளவர்கள நோய் கடுமையாக இருந்தாலும் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பச்சைத் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். ஆசனம் செய்யச் செய்ய நோயின் கடுமை தணிந்து விடும்.

7. கடுமையாக உழைப்பவர்களுக்கு யோகாசனம் முக்கியமா?

கடுமையாக உழைத்தாலும் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். குறிப்பாக விபா£தகரணி, சர்வாங்காசனம், அர்த்தசிரசாசனம், சிரசாசனம் ஆகியவற்றோடு மாற்று ஆசனங்கள் செய்து நாடி சுத்தியும் செய்தால் நல்லது.

8. எப்போதும் பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி யோகாசனம் செய்வது?

இவர்கள் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். இவர்கள் தங்கும் விடுதியிலாவது தூங்கி எழுந்தபின் குளித்துவிட்டு குறிப்பாக மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தால் போதுமானது.

9. குறைந்தது எவ்வளவு நேரம் ஆசனங்களைச் செய்ய வேண்டும்?

யோகாசன பிராணாயாமங்களை அதிக நேரம் செய்யவேண்டும் என்ற நியதி கிடையாது. தினமும் எந்தச் சூழ்நிலையிலும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. சில நாட்கள் மணிக்கணக்காக செய்து பின் சில நாட்கள் விட்டு விட்டு பின் தொடர்வது நல்லதல்ல. இதனால் பலன் அதிகம் கிடைக்காது. தினமும் விடா முயற்சியுடன் சில நிமிடங்களாவது ஆசன பிராணாயாமங்களைச் செய்வதால் அதிக பலன் கிடைக்கும்.

10. நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?

நேரம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் காலை மாலை ஒரு மணிநேரம் கண்டிப்பாக செய்யவேண்டும். நோய் தணிந்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது.

11. யோகாசனம் செய்பவர்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா?

நோய் உள்ளவர்கள் நோய் தீரும்வரை யோகாசன பிராணாயாமத்துடன் கடுமையாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். சாதாரணமாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுமையாக உணவுப் பத்தியம் இருக்க வேண்டியதில்லை. நடைமுறையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. உடல் வளையும் தன்மை ஏற்படும்.

12. யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு உண்டா?

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

13. எப்போது யோகாசனம் செய்யக்கூடாது?

உடல் களைப்பாக இருக்கும்போது நாடிசுத்தி செய்துவிட்டு யோகாசனம் செய்யலாம். உடல் உறவு கொண்ட மறுநாள், பெண்களாக இருந்தால் மாதவிடாய் காலங்களில் மற்றும் கர்ப்பமான 3 மாதத்திற்குப் பின் யோகாசனம் செய்யக்கூடாது. சாப்பிட்டவுடன் யோகாசனம் செய்யக்கூடாது. 5 மணி நேரம் சென்ற பின் தான் யோகாசனம் செய்ய வேண்டும். காய்ச்சல், அதிக மண்டைபிடி இந்த வேளைகளில் யோகாசன ஆசி¡¢யர்களிடம் ஆலோசனை பெற்று நேரடியாகப் பழகினால் விரைவில் நோய் குணமாகிவிடும்.

14. மாமிச உணவு சாப்பிடுகிறவர்கள் யோகாசனம் செய்யலாமா?

செய்யலாம். ஆனால் இவர்களுக்கு உடல் வளையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே ஆசனங்களை இவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. ஆசனத்தின் முழு நிலை மெதுவாகவே இவர்களுக்கு வரும். ஆகவே இவர்கள் யோகாசனங்களை மெதுவாகச்செய்யவேண்டும். ஆசனத்தில் பூரண நிலை அடைய உடல் வலி மேலும் சுளுக்கு ஆகியன ஏற்படும். மாமிசம் சாப்பிடுவர்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நல்லது