Tuesday 29 October 2013

மரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்?

நன்றி :பசுமைப் புரட்சி Green Revolution
மரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்?

மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தாது. ஏனென்றால் புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் சதுர வடிவிலும் அமைந்திருக்கும். 

தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் ஆனவை என்பதால், அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் அல்லது திருகு சுருள் வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும்.

மேலும், தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் பகுதிகள் உள்ளன. அவை மரவியம், பட்டையம் என்று அழைக்கப்படுகிறது.

மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடிவில் காணப்படுகிறது.

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்..


No comments:

Post a Comment